இந்த நாட்டில் இந்த ஆட்சியில் அரசியல் தீர்வு ஒன்று ஏற்படும் என்ற நம்பிக்கை  இல்லை 

174
(மன்னார் நகர் நிருபர்)
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்
 
இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்ட போது இலங்கையில் தமிழ் மக்களுக்கு நீண்ட காலமாக ஏற்பட்டுள்ள தேசிய பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு மூலம் ஒரு தீர்வை கொடுப்போம் என ஐனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் வளங்கிய வாக்குறுதியுடனே குறித்த நல்லாட்சி அரசாங்கம் அமைந்துள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (16) காலை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டில் அரசியல் தீர்வு ஒன்று ஏற்படாமல் இந்த நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையாது.தமிழ் மக்களுக்கு எவ்வித விமோசனமும் கிடைக்காது.அது தொடர்பான வழி நடத்தல் குழுவினுடைய கூட்டங்கள் பல இடம் பெற்றுள்ளது.முன்னேற்ற கரமான சில விடையங்கள் பகிரப்பட வேண்டிய விடையங்கள் தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கி கலந்துரையாடல்கள் இடம் பெற்றது.
ஆனால் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு பிற்பாடு அரசியல் யாப்பு தொடர்பான முயற்சி கிடப்பில் போடப்பட்டுள்ளது.உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு பிற்பாடு இலங்கையை ஆட்சி செய்கின்ற பிரதான இரு கட்சிகளும் தேர்தலின் போது மக்களின் ஆணையை பெறவில்லை.
மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்டது குறிப்பாக சிங்கள மக்களின் ஆதரவை பெற்றுக்கொண்டது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் கட்சி.
மஹிந்த ராஜபக்ஸவின் கட்சி உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது கனிசமனான வாக்குகளை பெற்றுக்கொண்டதன் காரணத்தினால் இந்த இரண்டு கட்சிகளும் அரசியல் தீர்வு விடயத்தை தாங்கள் மென்மேலும் முயற்சி எடுத்தோமாக இருந்தால் தாம் சிங்கள மக்களிடம் இருந்து ஓரங்கட்டி விடுவோம் என்ற உள் நோக்கத்துடயே குறித்த இரு கட்சிகளும் குறித்த விடையத்தில் ஆர்வம் காட்டவில்லை.
தற்போது குறித்த இரு தேசியக்கட்சிகளும் 2020 ஆம் ஆண்டு ஆட்சியை பிடிக்கின்ற , தமது கட்சிகளை வளர்க்கின்ற நோக்கத்தில் ஈடுபட்டு வருகின்றதோ தவிர அவர்கள் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் அதாவது தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வு வழங்க வேண்டும்.
அதே நேரத்தில் சர்வதேசத்தின் ஐ.நா.வின் பரிந்துரைகளை நிறைவேற்றி இலங்கை ஒரு சுமூகமான நாடாக மாறுவதற்கு இந்த அரசாங்கத்தில் தற்போதைக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
தற்போதுள்ள அரசாங்கத்தில் அரசியல் தீர்வு, அரசியல் தீர்வு மாற்றம் வரும் என்று நான் நம்பவில்லை என அவர் தெரிவித்தார்.
SHARE