நாவல் பழத்தைப் போல அதன் விதைகளிலும் உள்ள ஊட்டச்சத்துக்கள், எண்ணற்ற உடல் பிரச்சனைகளை எவ்வாறு சரிசெய்யும் என்பது குறித்து இங்கு காண்போம்.
நாவல் பழம் சத்துக்கள் நிறைந்த, அதிக மருத்துவ குணங்கள் கொண்ட பழமாகும். இதன்மூலம் எண்ணற்ற நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
நூறு கிராம் அளவிலான நாவல் பழத்தில் 15 மில்லிகிராம் கால்சியம், 1.41 மில்லிகிராம் இரும்புச்சத்து, 35 மில்லிகிராம் மெக்னீசியம், 15 மில்லிகிராம் பாஸ்பரஸ், 26.2 மில்லிகிராம் சோடியம், 18 மில்லிகிராம் வைட்டமின் சி, 84.75 கிராம் நீர்ச்சத்து ஆகியவை அடங்கியுள்ளன.
நீரிழிவு நோய்
அதே போல் நாவல் பழ விதைகளிலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இவை நீரிழிவு நோயை கட்டுப்படுத்த என பல பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.
நாவல் விதையில் உள்ள Jamboline மற்றும் Jambosine ஆகிய மூலப் பொருட்கள், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க பயன்படுகின்றன. இன்சுலினின் அளவை இந்த விதை உயர்த்துவதால், நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்.
இதய ஆரோக்கியம்
நாவல் பழத்தில் அதிக அளவில் பொட்டாசியம் உள்ளதால், இது இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த மருந்தாகும். மேலும் இந்த பழம் உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் உள்ளிட்ட நோய்களையும் குணப்படுத்தும்.
வயிற்றுப்புண்
ஜீரண கோளாறுகள், வயிற்றுப்புண், வயிற்று எரிச்சல் போன்றவற்றை சரிசெய்ய நாவல் இலைகளே போதுமானது. நாவல் இலைகளை நன்கு கழுவி, அவற்றை மென்று சாப்பிட்டாலே அல்சர் எனும் வயிற்றுப்புண் குணமடையும்.
ரத்த சுத்திகரிப்பு
ரத்தத்தை சுத்திகரிப்பு செய்ய நாவல் பழம் பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து, வைட்டமின் சி ஆகியவை ரத்தத்தில் சிவப்பணுக்களை உயர்த்த உதவுகின்றன. மேலும் மாதவிடாய் கோளாறுகள் உள்ள பெண்களுக்கு நாவல் பழங்கள் பெரிதும் உதவும்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்துதல்
நாவல் பழத்தை உரித்து, அதனுள் இருக்கும் விதையை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டு நன்கு கழுவ வேண்டும். பின்னர், அந்த விதைகளை வெயிலில் நன்கு உலர விட வேண்டும்.
அவை நன்கு காய்ந்த பின்னர், ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்க வேண்டும். பின்பு அதன் தோலை உடைத்து எடுத்தால், பச்சை நிறத்தில் சிறிய கோட்டை அதனுள் இருக்கும். அதனை மறுபடியும் 2 நாட்கள் வெயிலில் உலர விட்டு, பின் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின், அரைத்த விதைகளை சலித்து வைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில், ஒரு தேக்கரண்டி அளவு நீரில் கலந்து குடிக்க சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.
இதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. மேலும், மரபணு மாற்றம் பெற்ற நாவல் பழத்தை கட்டாயம் தவிக்க வேண்டும்.
அத்துடன் கர்ப்பிணிப் பெண்கள் இந்த நாவல் பழத்தை சாப்பிடுவது உகந்தது அல்ல.