ஹாலிவுட், பாலிவுட், தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, பெங்காலி என பல மொழிப் படங்களில் நாயகியாக நடித்திருப்பவர் தபு. 45 வயதான இவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை.
தபு பிறந்த சில நாட்களிலேயே பெற்றோர் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இது குறித்து தபு கூறும்போது, என் தந்தையை நான் பார்த்தது இல்லை. அவரை சந்திக்க விரும்பியதும் இல்லை என்பதால் எனக்கு தந்தையாகவும், என் தாய் இருக்கிறார் என்றார்.
அதோடு திருமண வயது வந்தபோது பெற்றோரிடம் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று கூறியிருக்கிறார்.
தற்போது தபுவுக்கு திருமண ஆசை வந்துள்ளது. மும்பை தொழில் அதிபர் ஒருவரை மணக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. திருமண ஏற்பாடுகள் ரகசியமாக நடப்பதாக கூறப்படுகிறது.