இந்த விஷயத்தில் தெறி, கபாலியை வீழ்த்துமா சூர்யாவின் S3?

216

சூர்யாவின் S3 படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. படக்குழுவினரும் புரொமோஷன் வேலைகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

தற்போது S3 படத்தை மலேசியாவில் Malik Streams வெளியிடவுள்ளனர். இதுவரை 103 திரையரங்குகளை புக் செய்திருக்கும் இவர்கள் நிறைய திரையரங்குகளை பிடிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன் இவர்கள் மலேசியாவில் தெறி படத்தை 200 திரையரங்கிலும் கபாலி படத்தை 400 திரையரங்கிலும் வெளியிட்டுள்ளனர். தெறி, கபாலியை விட S3 அதிக திரையரங்குகளில் வெளியாகிறதா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

SHARE