சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகளை அழிக்கும் விதமாக காஸ்பியன் கடலில் இருந்து ரஷ்யா 18 ஏவுகணைகளை ஏவியுள்ளது.சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யா, ஐ.எஸ்.அமைப்பினரை முற்றிலும் அழிப்பதற்காக கடும் தாக்குதல்களில் இறங்கியுள்ளது.
விமானங்கள் மூலம் மட்டுமில்லாமல் கடலில் இருந்து ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் Hmeymin விமான தளத்தில் பணியாற்றும் விமானிகள் மற்றும் ஊழியர்கள் பாரீஸ் தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வெடிகுண்டுகளில் ’இது பாரீஸ் தாக்குதலுக்காக’ என்று எழுதினர். பின்னர் அந்த வெடிகுண்டுகள் மூலமே ஐ.எஸ். நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் காஸ்பியன் கடல் பகுதியில் இருந்து போர்க் கப்பல் மூலம் ஏவுகணை தாக்குதலும் நடத்தப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிரியாவின் ரசாக், இத்லிப் மற்றும் அலெப்போ மாகாணங்களில் உள்ள 7 நிலைகள் மீது 18 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ரஷ்யா நடத்திய தாக்குதகளில் இந்த வாரத்தில் மட்டும் ஐ.எஸ். அமைப்பினருக்கு சொந்தமான 15 பெட்ரோலிய எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பெட்ரோலிய எண்ணையை ஏற்றி சென்ற 525 வாகணங்கள் ஆகியவை அழிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் சேர்ஜெய் ஷொய்கு தெரிவித்துள்ளார். |