இந்த 4 ஆப் இருந்தால் டெங்கு, சிக்கன்குனியா நெருங்காது

230

மழைக்காலம் வந்தாலே டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட காய்ச்சலும் தானாகவே வந்துவிடும். சுத்தமான குடிநீர், சுற்றுச்சூழல், கொசுக்களை முற்றிலுமாக ஒழித்தல், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தல், காய்ச்சல் மற்றவர்களிடமிருந்து பரவாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

அந்த வகையில் தான் கொசு ஒழித்தல் முதல் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பது வரையான சேவைகளை இந்த 4 ஆப்கள் மூலம் பெற்றுவிடலாம்.

  • அர்பன் க்ளாப் (UrbanClap)

கொசுக்கள் உள்ளிட்ட பூச்சியினங்களை அழிப்பதற்கு தேவையான, தரம் வாய்ந்த வேதி மருந்துகள் என்னென்ன என்பது குறித்து அறிந்துகொள்ளவும், வீடுகள் முதல் பெருநிறுவனங்கள் வரை கொசுக்களை ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை வீடு தேடி வந்து வழங்கும் சேவையை இந்த ஆப் மூலம் நிறைவேற்றிக் கொள்ளலாம்.

  • இந்தியாமார்ட் (IndiaMart)

பெருநிறுவனங்கள், உணவகங்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட பல இடங்களில் கொசுக்களை ஒழிக்கும் சேவைகளை இந்த ஆப் மூலம் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

  • எக்ஸ்போர்ட்டஸ் இந்தியா (ExportersIndia)

இயற்கை கொசு விரட்டிகள், கொசுவர்த்திகள், கொசு நம்மை தாக்காமல் இருக்க உதவும் க்ரீம்கள் மற்றும் லோஷன்களை வீடு தேடிவந்து வழங்கும் சேவையை எக்ஸ்போர்ட்டஸ் இந்தியா அளிக்கிறது.

  • டைம்சேவர்ஸ் (Timesaverz)

சுற்றுப்புறத்தை சுத்தம் செய்தல், குழாய்களை சரிசெய்தல், பூச்சிகளை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட சேவைகளை இந்த ஆப் வழங்குகிறது.

SHARE