இனங்களை பிளவடையச் செய்த யுகத்தை ஜனாதிபதி முடிவுக்குக் கொண்டு வந்தார்!– தயாசிறி

295

இனங்களை பிளவடையச் செய்த வரலாற்றைக் கொண்ட யுகத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  அவர் மேலும் கூறுகையில்…

புதிய அரசியலமைப்பை உருவாக்க பல சந்தர்ப்பங்கள் காணப்பட்டன.

இந்த நிகழ்வுகள் மிகவும் முக்கியமானவையாகவே கருதப்பட வேண்டும்.

எமது நாடு பல்வேறு பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டிருந்தது.

21ம் நூற்றாண்டை எதிர்நோக்கி வரும் நாடு என்ற ரீதியில் போரை முடிவுக்குக் கொண்டு வந்து ஒற்றுமையை ஏற்படுத்தக் கூடிய திட்டமொன்று இன்று காணப்படுகின்றது.

Dayasiri_Jayasekara

2009ம் ஆண்டு போரிலிருந்து மஹிந்த ராஜபக்ச நாட்டை மீட்டெடுத்தார், எனினும் எம்மால் எடுக்கப்பட வேண்டிய சில முக்கிய விடயங்கள் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE