இனவாதத்தை தூண்டுவோருக்கு கொழும்பு மக்கள் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல பாடம் புகட்டுவார்கள் என மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பீதியடைந்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி மிக வலுவான ஓர் வேட்பாளர் குழுவினை நிறுத்தியுள்ளது.
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் தினேஸ் குணவர்தன போன்றவர்கள் இனவாதத்தை தூண்டி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
போலியான பிரச்சாரங்களை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான நபர்களுக்கு இம்முறை கொழும்பு மக்கள் தகுந்த பாடத்தை கற்பிப்பார்கள்.
புதிய சரித்திரம் எழுதப்போவதாக கூச்சலிடம் விமல் வீரவன்ச, ஆகஸ்ட் மாதம் 17ம் திகதியின் பின்னர் அமைதியாக இருக்க நேரிடும் என முஜிபுர் ரஹ்மான் கொழும்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.