இனிமேல் எல்லாம் அப்படி தான்.. ஹர்பஜனை தமிழ் பேச வைத்து அழகு பார்த்த அஸ்வின் (வீடியோ இணைப்பு)

254
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வினும், ஹர்பஜனும் தமிழில் உரையாடிய வீடியோவை பிசிசிஐ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

fun_boys_001

உலகக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 2வது அரையிறுதி ஆட்டம் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் ஹர்பஜன் சிங், அஸ்வின் தமிழில் உரையாடிக் கொள்வது போன்ற ஒரு வீடியோவை பதிவேற்றியுள்ளது.

இதில் அஸ்வின், ஹர்பஜனுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கிறார். அதேபோல் அஸ்வினுக்கு ஹர்பஜன் பஞ்சாபி கற்றுக் கொடுக்கிறார். மேலும், இருவரும் பல கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளனர்.

வீடியோ இதோ,

SHARE