
அம்பாறை திருக்கோவில் பகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இனியபாரதியினால் காணிகள் பலாத்காரமாக கையேற்கப்பட்டுள்ளதாக ஜேவிபி குற்றம் சுமத்தியுள்ளது.
ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், இந்தக்குற்றச்சாட்டை நேற்று நாடாளுமன்றத்தில் சுமத்தினார்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக முன்னாள் அரசாங்கத்துக்கு உதவியளித்தநிலையிலேயே இனியபாரதியினால் இந்த காணி அபகரிப்பு
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
போர் காலத்தின்போது இனியபாரதி, ஆயுதமுனையில் செயற்பட்டுவந்தார்.
இன்று அவர் அங்குள்ள மக்களின் வீடுகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் ஹேரத் குற்றம் சுமத்தினார்.
எனவே அரசாங்கம் இந்தவிடயத்தில் தலையிடவேண்டும் என்று விஜித ஹேரத் கேட்டுக்கொண்டார்.