இனியும் சுவிஸ் மக்கள் அவதிப்பட வேண்டாம்!

292

625.400.560.350.160.300.053.800.748.160.70 (1)

சுவிஸ் அஞ்சல் அலுவலகங்களில் தொடங்கப்பட்டுள்ள பைலட் திட்டத்தின்(Pilot Project) மூலம் இனி அஞ்சல் அலுவலகங்களில் டெபிட் கார்டு(Debit Card) ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்குவதற்கான தொகையை அஞ்சல் அலுவலகங்களில் உள்ள கணக்குகள் மூலமும், நேரடியாக பணம் செலுத்தியும் வாங்கி வருகின்றனர்.

பொதுவாக பயன்பாட்டில் இருக்கும் டெபிட் கார்டு அங்கு ஏற்றுக்கொள்ளப்படாததால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்நிலையில் 15 மில்லியன் பிராங் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ள பைலட் திட்டத்தின் மூலம் முதன்முறையாக அஞ்சல் அலுவலகங்களில் டெபிட் கார்டு ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் Bern மாகாணத்தில் உள்ள Zollikofen அஞ்சல் அலுவலகத்திலும், Aargau மாகாணத்தில் உள்ள Baden அஞ்சல் அலுவலகத்திலும் ஒரு மாத காலத்திற்கு சோதனையாக டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் முறை கொண்டு வரப்படுகிறது.

அதே சமயம் சுவிஸ் முழுவதும் இந்த முறை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சேவை, பொருட்கள் மற்றும் தபால் சேவைகள் மீது மட்டுமே சாத்தியம் எனவும், கட்டணங்களை செலுத்துவதற்கு இது பொருந்தாது எனவும் கூறப்பட்டுள்ளது.

SHARE