இனி கார்கள் மற்றும் கைப்பேசிகளை சில செக்கன்களில் சார்ஜ் செய்யலாம்!

253

மின்கலத்தினைக் கொண்டிருக்கும் எந்தவொரு இலத்திரனியல் சாதனங்களையும் சார்ஜ் செய்வதற்கு நீண்ட நேரம் எடுக்கும்.

இதனால் குறைந்த நேரத்தில் சார்ஜ் செய்வதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கும் முயற்சியில் தொழில்நுட்பவியலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் இம் முயற்சிக்கு உதவக்கூடிய புதிய மட்டீரியல் (Material) ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் உதவியுடன் இலத்திரனியல் கார்கள் மற்றும் ஸ்மார்ட் கைப்பேசிகள் என்பவற்றினை சில செக்கன்களில் சார்ஜ் செய்ய முடியும்.

இதற்கு முன்னர் மேற்கொண்ட ஆராய்ச்சி ஒன்றில் சூப்பர் கப்பாசிட்டரினை (Super Capacitors) பயன்படுத்தி விரைவாக சார்ஜ் செய்யும் முறையினை கண்டுபிடிக்க முற்பட்டனர்.

எனினும் இது தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் Drexel பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்றே புதிய மட்டீரியலை கண்டுபிடித்துள்ளது.

MXene எனும் குறித்த மட்டீரியலின் உதவியுடன் பெரிய கொள்ளளவு உடைய மின்கலங்களையும் விரைவாக சார்ஜ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE