இன்னிங்ஸ் தோல்வியின் பிடியில் மே.இ.தீவுகள்

190

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கப் போராடிக் கொண்டிருந்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

மேற்கிந்தியத் தீவுகளின் கிங்ஸ்டன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 52.3 ஓவர்களில் 196 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிளாக்வுட் 62, சாமுவேல்ஸ் 37 ரன்கள் எடுத்தனர். இந்தியத் தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், முகமது சமி, இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்ûஸ ஆடிய இந்திய அணி 3-ஆவது நாளான திங்கள்கிழமை 171.1 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 500 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்தியத் தரப்பில் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 158 ரன்கள் குவித்தார். அஜிங்க்ய ரஹானே ஆட்டமிழக்காமல் 108 ரன்கள் குவித்தார்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ரோஸ்டன் சேஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.

மே.இ.தீவுகள்-48/4: முதல் இன்னிங்ஸில் 304 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 15.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்து தடுமாறியபோது, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது அந்த அணி, இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு 256 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் கைவசம் 6 விக்கெட்டுகள் மட்டுமே இருந்தன. அதனால் அந்த அணி இந்த டெஸ்டிலும் இன்னிங்ஸ் தோல்வியை சந்திப்பது உறுதியாகியுள்ளது.

SHARE