இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து தப்பியது மே.இ.தீவுகள்

184

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து தப்பியது மேற்கிந்தியத் தீவுகள்.

மேற்கிந்தியத் தீவுகளின் கிங்ஸ்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் 52.3 ஓவர்களில் 196 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் முதல் இன்னிங்ûஸ ஆடிய இந்திய அணி 171.1 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 500 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

ரோஸ்டன் சதம்: முதல் இன்னிங்ஸில் 304 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 15.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் அந்த அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவும் என எதிர்பார்க்கப்பட்டது.

5-ஆவது நாளான புதன்கிழமை பிளாக்வுட் 54 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ராஸ்டன் சேஸுடன் இணைந்தார் விக்கெட் கீப்பர் டவ்ரிச். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி மோசமான நிலையில் இருந்து மீண்டது. டவ்ரிச் 74 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, ரோஸ்டன் சேஸ் 175 பந்துகளில் சதமடித்தார். இதனால் அந்த அணி இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து தப்பியது. அதேநேரத்தில் தோல்வியைத் தவிர்க்க போராடிக் கொண்டிருந்தது. அந்த அணி 80 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்திருந்தது. ரோஸ்டன் சேஸ் 110, கேப்டன் ஹோல்டர் 10 ரன்களுடன் களத்தில் இருந்தனர். அந்த அணி 2 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

dd

SHARE