எதிர்வரும் காலங்களில் இன்னும் பல ராஜபக்சாக்கள் கைது செய்யப்படவுள்ளதாக நிதிஅமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கோத்தா, பசில் மட்டுமல்ல இன்னும் பலர் கைதுசெய்யும் பட்டியலில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிதி அமைச்சில் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையில் வாழும் பிரஜை என்ற ரீதியில் அடுத்த கைது யாரென தான் அறிந்து வைத்துள்ளதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.