இன்புளுவன்சா மற்றும் எடினோ வைரஸ் தாக்கம் தொடர்பாக இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

244

தென்னிலங்கையை புரட்டிப்போட்டுள்ள இன்புளுவன்சா மற்றும் எடினோ வைரஸ் தாக்கமானது ஏனைய பகுதிகளுக்கும் பரவக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த பதில் சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் சரத் அமுனுகம இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

இந்த வைரஸின் தாக்கமானது ஜுன், ஜுலை மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிகமாக பரவுவதும், பின்னர் குறைவடைவதும் வழமை என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களை, வைத்தியசாலையிலுள்ள ஏனைய நோயாளர்களிடம் இருந்து தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்குமாறு அனைத்து வைத்தியசாலைகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

 

 

SHARE