இன்று ஆரம்­ப­மா­கின்­றது 36ஆவது ஜெனிவா தொடர்.!

251

இன்று ஆரம்­ப­மா­கின்­றது 36ஆவது ஜெனிவா தொடர்.!

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 36ஆவது கூட்டத் தொடர் இன்று திங்­கட்­கி­ழமை முதல் எதிர்வரும் 29ஆம் திக­தி­வரை ஜெனி­வாவில் நடை­பெ­ற­வுள்­ளது. இம்­முறை கூட்டத் தொடரில் இலங்­கை­யி­லி­ருந்து அமைச்­சர்கள் மட்­டக்­குழு பங்­கேற்க மாட்­டாது என்­ப­துடன் இலங்கை குறித்த எந்த விவ­கா­ர மும் கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் உள்­ள­டக்­கப்­ப­டவும் இல்லை.

மேலும் ஜெனி­வா­வி­லுள்ள இலங்கை வதி­விட பிர­தி­நிதி ரவி­நாத ஆரி­ய­சிங்க தலை­மை­யி­லான குழு­வி­னரே 36 ஆவது கூட்டத் தொடரில் இலங்­கையின் சார்­பாக கலந்­து ­கொள்­ள­வுள்­ளனர்.

திங்­கட்­கி­ழமை முத­லா­வ­தாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் தலை­வரும் ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரும் உரை­யாற்­ற­வுள்­ளனர். இதன்­போது இலங்­கையின் அடுத்­த­கட்ட நட­வ­டிக்கை மற்றும் இது­வ­ரை­யான செயற்­பா­டுகள் குறித்து சில விட­யங்­களை முன்­வைக்­கலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

குறிப்­பாக 2015 ஆம் ஆண்டு ஜெனிவா பிரே­ரணை அமு­லாக்கம் தொடர்பில் தனது மதிப்­பீட்டை ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரும் செய்ட் அல் ஹுசேன் இன்­றைய முத­லா­வது உரையில் வெ ளியி­டுவார் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இந்தக் கூட்டத் தொடரில் இலங்­கையின் விவ­கா­ரங்கள் எதுவும் நிகழ்ச்சி நிரலில் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை எனினும் சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்கள் தமது நேர உரை­க­ளின்­போது இலங்கை குறித்து கேள்­வி­யெ­ழுப்பும் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அதா­வது ஜெனிவா அமர்­வு­க­ளின்­போது பொது­வான விவா­தங்­க­ளின்­போது பல்­வேறு தலைப்­புக்­களின் கீழ் உரை­யாற்­ற­வுள்ள சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­திகள் இலங்கை தொடர்பில் வலி­யு­றுத்­தல்­களை மேற்­கொள்­ளலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. சர்­வ­தேச மனித உரிமை கண்­கா­ணிப்­பகம் சர்­வ­தேச மன்­னிப்புச் சபை என்­பன இலங்கை குறித்து வலி­யு­றுத்­தல்­களை விடுக்­கலாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்கள் மற்றும் சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் இலங்கை தொடர்பில் பல்­வேறு உப­குழுக் கூட்­டங்­களை ஜெனிவா வளா­கத்தில் நடத்­த­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை இலங்கை உட்­பட பல்­வேறு நாடு­க­ளுக்கு மேற்­கொள்­ளப்­பட்ட விஜ­யங்கள் தொடர்பில் பல­வந்­த­மாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஆராயும் ஐ.நா. வின் விசேட குழுவானது ஒரு நீண்ட அறிக்கையை ஐ.நா. மனித உரிமை பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பித்திருக்கிறது. அதில் இலங்கை தொடர்பாகவும் சில விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

SHARE