கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கூட்டமொன்று நடத்தப்படவுள்ளது.
இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் இந்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
வற் வரி உயர்வு குறித்த நாடாளுமன்ற விவாதத்தின் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தலைமையில் இந்த கூட்டம் நடத்தப்படவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கூட்டு எதிர்க்கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வற் வரி திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுவது குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.
தென் கொரியாவிற்கு விஜயம் செய்துள்ள கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனைய அனைவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.