அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்ககோரி இன்று காலை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 08 கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் சிறு குற்றங்களில் ஈடுபட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளே இன்று காலை 07 மணி முதல் சிறைச்சாலைக்குள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் மூன்று கைதிகளின் உறவினர்கள் அரசியல் கைதிகளாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், நாடளாவிய ரீதில் இன்று 13 சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.