
விக்ரம்
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா. அஜய் ஞானமுத்து இயக்கும் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். ஆக்ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.
Here's Team #Cobra sending their love and wishes to our one & only #ChiyaanVikram Sir. #HBDChiyaanVikram ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
And also speaking about #WhyweloveChiyaan https://t.co/cj1TxQyoaU— Ajay Gnanamuthu (@AjayGnanamuthu) April 17, 2020
இந்நிலையில் விக்ரம் தனது 54-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் கோப்ரா படக்குழு “தங்களுக்கு ஏன் விக்ரமை பிடிக்கும்” என்பதை கூறி பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் சர்ப்ரைஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.