இன்று தேசிய துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

217

இன்று தேசிய துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, அரச நிறுவனங்களில் தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இன்றைய தினம் தேசிய துக்கதினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கு அறிவுறுத்தும் சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளதாகவும் உள்ளக, உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

மேலும் இதன்படி, நாள் முழுவதும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறும் காலை 08.30 மணிக்கு அனைத்து அரச நிறுவனங்களிலும் 3 நிமிட மௌன அஞ்சலி செலுத்தி உயிரிழந்தவர்களை நினைவு கூறுமாறும் குறித்த அறிக்கையூடாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தவிசாளர்கள், பிரதேச செயலாளர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வாரத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பின் அவை அனைத்தையும் இரத்து செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக, உள்ளக, உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளரான கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்றிரவு 8 மணி முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE