இன்று முட்டை இறக்குமதிக்கான டெண்டர் கோரும் பணி

110
முட்டை இறக்குமதிக்கான சர்வதேச அளவில் டெண்டர் கோரும் பணி இன்று தொடங்கும் என இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, முட்டை இறக்குமதிக்கான டெண்டர் கோரல், இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்தல் மற்றும் பொருத்தமான இறக்குமதியாளர்கள் தேர்வு ஆகியவை இந்த வாரத்திற்குள் முடிக்கப்படும் என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, சந்தைக்கு தேவையான முட்டைகளின் அளவை அரசு முடிவு செய்து, இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்திற்கு தெரிவிக்க உள்ளது.

அதன்படி, இந்த நாட்டுக்கு தேவையான முட்டைகளின் எண்ணிக்கையை இந்த வாரத்திற்குள் இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டினட் 03 மாகாணங்களை மையப்படுத்தி இன்று முட்டை 53 ரூபாவிற்கு விற்பனை செய்யும் நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

லொறிகள் மூலம் பல பிரதேசங்களுக்கு 800,000 முட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக அதன் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.

SHARE