இன்றைய ஆட்சியாளர் வடகிழக்கில் 1000 விகாரைகளை கட்டுகிறார்கள். நாளைய ஆட்சியாளர்கள் 10000 விகாரைகளை கட்டுவார்கள்.

486

 

சர்வதேச மயப்பட்ட தமிழர் பேரம் பேசும் வல்லமையை இல்லாமல் செய்தமை கூட்டமைப்பு செய்த மிகப்பெரிய தவறாகும்.

? இராணுவத்தை முற்றாக வெளியேற்றுங்கள் என்ற கோரிக்கையை தனியார் காணிகளில் உள்ள இராணுவத்தினரை மட்டும் வெளியேற்றுங்கள் என குறுக்கினார்கள்.

? இனவழிப்புக்கான தீர்மானம் எழுகதமிழ் போன்றவற்றை தமிழர் தரப்பின் கோரிக்கைகளை வலுப்படுத்துவற்கு பயன்படுத்துவற்கு பதிலாக அதனை குழப்பியடிக்கவே கூட்டமைப்பு செயற்பட்டது.

? தீர்வுக்கான இடைக்கால அறிக்கையில் ஒவ்வொரு கட்சியும் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தீர்க்கமான எந்தவித முன்மொழிவும் முன்வைக்கப்படவில்லை.

? வடமாகாண சபை முன்மொழிந்த தீர்வுத்திட்டத்தையாவது ஆராய்ந்து பார்க்குமாறு கேட்பதற்கு கூட எமது தலைமைகள் தயாராக இருக்கவில்லை.

? 70 வருடங்களாக என்ன விடயங்களுக்காக போராடினோமோ அவற்றை முற்றாக மறுதலித்து சிங்கள பௌத்த மக்களுக்கான தீர்வுத்திட்டமே முன்வைக்கப்பட்டுள்ளது.

? இன்றைய ஆட்சியாளர் வடகிழக்கில் 1000 விகாரைகளை கட்டுகிறார்கள். நாளைய ஆட்சியாளர்கள் 10000 விகாரைகளை கட்டுவார்கள். பின்னர் அவற்றை சுற்றிய பிரதேசங்கள் தொல்பொருள் திணைக்களங்களுக்கு சொந்தமானவை எனச் சொல்லி அபகரிப்பார்கள். இவற்றை நீதிமன்றம் சென்று தட்டிக்கேட்டால் நீங்கள் இரண்டாம் தர குடிமக்கள் என கூறி அவர்கள் சட்ட அந்தஸ்தை பெற்றுக்கொள்ளும் நிலையே ஏற்படும்.

ஆகவே, இன்று நாம் ஒரு மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம். தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு உறுதியுடனும் பற்றுறுதியுடனும் செயற்படவேண்டிய காலகட்டம் இது.

சலுகைகள் பதவிகளுக்கு அடிபணியாமல் பணியாற்றக்கூடிய அரசியல் வாதிகளை நாம் உருவாக்க வேண்டும்.

தூரநோக்குடன் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஏற்ற மக்கள் பிரதிநிதிகளை நாம் உருவாக்க வேண்டும்.

SHARE