இன்றைய காலநிலை – மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

174

அடுத்து வரும் சில நாட்களில் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில், மாலை நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாதறை, களுத்துறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழைபெய்யக் கூடும். கொழும்பு, கம்பஹா, குருநாகல் மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக் கூடும்.

மேலும், கிழக்கு, ஊவா, வட மத்திய மாகாணங்களிலும், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மேலும் இடி, மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாத்துகொள்ள பொது மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

SHARE