இன்றைய நாள் இனிய நாள் ஆக வேண்டுமா?…

272

படுக்கையில் போய்ப்படுத்தவுடன் இன்றைய நாள் வீணாகிவிட்டதே என்றோ அல்லது செய்ய வேண்டியவற்றைச் செய்யவில்லையே என்றோ கவலைப்படுகிறீர்களா. இதிலிருந்து விடுபட நீங்கள் நாளாந்தம் செய்ய வேண்டியவை:

1. உங்கள் நடவடிக்கைகளை உங்களிற்கு ஏற்ப மட்டுப் படுத்துங்கள்

அளவிற்கு அதிகமாக ஆசைப்படக்கூடாது. ஓய்வு முக்கியம். காலையில் எழுந்தவுடன் இன்று செய்ய வேண்டியவற்றை நிரைப்படுத்துங்கள். அவற்றில் முக்கியமானவை எது தேவையில்லாதது எது ஒத்தி வைக்கக்கூடியது எது என்று வகைப்படுத்துங்கள்.

2. உடற்பயிற்ச்சி, தியானம், யோகா

உடற்பயிற்ச்சி தியானம், யோகாசனம் போன்றவை உணவைப் போலவே முக்கியமானவை. இவற்றிற்கு நேரம் ஒதுக்குங்கள். ஒன்றையாவது கட்டாயமாகச் செய்யுங்கள்.

3. செல்லப் பிராணிகள் பிள்ளைகள்

செல்லப்பிராணிகள் அல்லது பிள்ளைகளுடன் விளையாடுவதற்கு நேரம் ஒதுக்குங்கள்.

4. தீயாரைக் காண்பதுவும் தீதே

உங்களின் மனதில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திக் கொள்பவர்களுடன் பழகுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். சிலர் மற்றவர்களைக் கலாய்ப்பதற்கென்றே அலைகிறார்கள்.உங்களை உற்சாகப்படுத்துபவர்கள், ஊக்கப்படுத்துபவர்கள், உங்கள் நலனில் அக்கறை உள்ளவர்களுடன் பழகுங்கள்.

5. படைத்தல் சிறந்தது

பத்திரிகைகளிலோ அல்லது இணையங்களிலோ வருபவற்றிற்கு பின்னூட்டம் எழுதுங்கள். அல்லது உங்களிற்கென்று ஒரு வலயத்தையோ அல்லது ஒரு வலைப்பூவையோ உருவாக்குதலும் நன்று. உங்கள் மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்ப்பது நல்லது. நவீன வாழ்க்கை முறைமை பலரைத் தனிமைப்படுத்தியுள்ளது. உங்களிடம் இருக்கும் படைப்பாற்றலை வளருங்கள். பாடுதல், வரைதல் போன்றவை பயன்தரும்.

6. நன்மை செய்யுங்கள்

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் எவருக்காவது உதவுங்கள், நன்மை செய்யுங்கள், நல்லாசி கூறுங்கள்.

7. சிரியுங்கள்

நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். தொலைக்காட்சியில் நகைச்சுவைக் காட்சிகளைப் பாருங்கள், எழுத்து ஊடகங்களில் வரும் நகைச்சுவைத் துணுக்குகளை வாசியுங்கள்.

8. என்றும் புதிது தேவை

புதியவர்களைச் சந்தியுங்கள், புதியவற்றை அறிந்து கொள்ளுங்கள், புதிய இடங்களுக்குச் செல்லுங்கள்.

9. மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடாதீர்கள்.

பலரது கவலைகளுக்கு மற்றவர்களுடன் தங்களை ஒப்பிடுவதே முக்கிய காரணமாக இருக்கிறது.

10. எல்லாரையும் திருப்திப் படுத்த முயல வேண்டாம்.

எல்லோரையும் திருப்திப்படுத்த முயன்றால் அது தோல்வியிலேயே முடியும். சிலரது அதிருப்தியைச் சம்பாதிக்காமல் வாழ்க்கை நடத்த முடியாது.

 

SHARE