மேஷம்
காரிய வெற்றிக்கு கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டிய நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. உற்றார் உறவினர்களால் விரயங்கள் ஏற்படலாம். தானுண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பது நல்லது.
ரிஷபம்
கவலைகள் விலகக் காளை வாகனத்தானை வழிபட வேண்டிய நாள். உத்தியோக அனுகூலம் உண்டு. உயர் அதிகாரிகளால் நன்மை ஏற்படும். திருமணத்தடை அகலும். புதிய நண்பர்களின் சந்திப்பு கிட்டும். உடல்நலத்தில் கவனம் தேவை.
மிதுனம்
காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். புதியவர்களின் நட்பால் பொருளாதாரநிலை உயரும்.
கடகம்
பிள்ளைகளால் பெருமை வந்து சேரும் நாள். பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். மற்றவர்களுக்காக எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். இடம், பூமியால் லாபம் உண்டு. பஞ்சாயத்துக்கள் சாதகமாகும்.
சிம்மம்
விமர்சனங்களால் ஏற்பட்ட விரிசல் அகலும் நாள். வீட்டுப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. வாயில் தேடி வரன்கள் வந்து சேரலாம். தனவரவு திருப்தி தரும்.
கன்னி
பிரதோஷ வழிபாட்டால் பெருமை காண வேண்டிய நாள். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். எடுத்த செயலை எளிதில் முடிக்கும் ஆற்றல் பிறக்கும். வருமானம் திருப்தி தரும். வழக்குகள் சாதகமாக முடியும்.
துலாம்
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பாக்கிகள் வசூலாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய பொறுப்புகளும் வந்து சேரலாம்.
விருச்சகம்
நந்தீஸ்வரர் வழிபாட்டால் நலம் காண வேண்டிய நாள். பணவரவு திருப்தி தரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பயணத்தால் பலன் கிடைக்கும். பல நாட்களாக பிரிந்திருந்த ஒருவர் உங்களைத் தேடி வரலாம்.
தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். எதிர்பாராத விதத்தில் இடமாற்றம், ஊர்மாற்றங்கள் வந்து சேரலாம். திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் செய்வீர்கள்.
மகரம்
மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நடைபெற்று மகிழ்ச்சியைக் கூட்டும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.
கும்பம்
உறவினர் வருகையால் உற்சாகம் காணும் நாள். கொடுத்தவாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். வீடு,இடம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகள் வெற்றி தரும்.
மீனம்
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண் டிய நாள். எதிரிகள் விலகுவர். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். தொழில் ரீதியான பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். வாங்கல்–கொடுக்கல்கள் ஒழுங்காகும்.