இப்படிப்பட்ட தலைவலி உள்ளதா? அலட்சியப்படுத்த வேண்டாம் ஆபத்து

171

காய்ச்சல், சளி, சைனஸ், உடல்சோர்வு, மன அழுத்தம், மற்றும் அதிக ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் மூலம் கடுமையான தலைவலியை சந்திக்க நேரிடும்.

ஆனால் சில சமயங்களில் தலைவலி என்பது பெரிய பிரச்சனைகளின் முன் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.

எனவே எந்தெந்த தலைவலி எந்தெந்தப் பிரச்சனையின் அறிகுறி என்று இப்போது பார்ப்போம்…

இடி இடிப்பது போன்ற தலைவலி

தலைக்குள் இடி இடிப்பது போன்ற தலைவலி ஒரு நிமிடத்திற்கு மேல் ஏற்பட்டால் அது மூளையில் சிறியதாக ரத்த கசிவு ஏற்பட்டதை உணர்த்தும் அறிகுறியாகும்.

மாறுபட்ட தலைவலி

தலைவலி ஒரே மாதிரியாக இல்லாமல், வலி ஏற்ற இறக்கத்தோடு அல்லது ஒற்றைத் தலைவலியாக அவ்வபோது இருந்தால், அது குருதி நாளத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

கண்களுக்குப் பின் ஏற்படும் வலி

வலியானது தலையில் இல்லாமல் கண்களுக்குப் பின்புறம் அல்லது கண்களை சுற்றி இருந்தால் அது க்ளாக்கோமா அல்லது சைனஸ் பிரச்சனை உள்ளதை குறிக்கிறது.

நெற்றி வலி

நெற்றியின் இரண்டுப் பக்கங்களிலும் வலி அதிகமாக இருந்தால், அது ஏதாவது ஒரு இதய நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.

காலையில் ஏற்படும் தலைவலி

இரவில் தூங்கும் போது மூக்கு எரிச்சல் இருந்தால், அது காலையில் எழுந்திருக்கும் போது தலைவலியை ஏற்படுத்தும். இந்த தலைவலி சைனஸ் பிரச்சனையின் அறிகுறியாகும்.

பக்கவாத தலைவலி

ஒரு மாதத்திற்கு மேல் மயக்கம் மற்றும் தலைச்சுற்றல் பிரச்சனைகள் இருந்தால், அது பக்கவாதத்திற்கான அறிகுறியாக கூட இருக்கலாம்.

SHARE