இந்தோனேசியாவில் உள்ள மக்கள் இறந்த உடலங்களை தங்களோடு பல காலம் வீட்டில் வைத்திருப்பதையும், அதன்பிறகு பாடம்பண்ணப்பட்ட உடலங்களை வருடாவருடம் உடுத்தி மகிழ்வதையும் காணக்கூடியதாக உள்ளது. இது பற்றிய ஆய்வாகவே இந்த வாரத்திற்கான நிஜத்தின் தேடல் நிகழ்ச்சி அமைந்துள்ளது.
உலகின் பல பகுதிகளிலும் வேறு விதமான விநோத பழக்கவழக்கங்கள் இருந்தாலும், உடலங்களை பலகாலம் வைத்திருத்தல் என்ற வித்தியாசமான நடைமுறை ஒன்று இவர்களிடையே காணப்படுகின்றது.
இது தொடர்பான பல சுவாரஸ்யமான விடயங்களை இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியின் ஆய்வாளர் சுரேஸ் தர்மா விபரித்துள்ளார்.