இப்படியும் மரணம் நிகழுமா? சுற்றுலா சென்ற பெண்ணிற்கு நேர்ந்த துயரம்

294

பிரான்ஸ் நாட்டில் சுற்றுலா சென்ற பெண் ஒருவர் கார் விபத்தில் உயிர் தப்பிய பிறகும் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுவீடன் நாட்டை சேர்ந்த இரு பெண்கள் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஒரு ஆண் என மூவரும் பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

கடந்த புதன்கிழமை இரவு வேளையில் மூவரும் தெற்கு பிரான்ஸில் உள்ள Sainte Maxime என்ற நகர் சாலையில் காரில் பயணம் செய்துள்ளனர்.

இரு பெண்களும் பின் இருக்கையில் அமர்ந்திருக்க ஆண் காரை ஓட்டியுள்ளார்.

அப்போது, அதிவேகத்தில் சென்றுக்கொண்டு இருந்த இவர்களின் கார் எதிரே மற்றொரு கார் மோதுவது போல் வந்துள்ளது.

ஆபத்தை உணர்ந்த ஓட்டுனர் காரை வேகமாக பக்கவாட்டு பகுதியில் திருப்பியதும் எதிரே வந்த கார் மீது மோதாமல் தப்பியுள்ளது.

ஆனால், கார் திரும்பிய வேகத்தில் அது சாலையில் பலமுறை உருண்டுள்ளது.

இறுதியில் கார் ஒரு பாலத்தின் விளிம்பில் சென்று நின்றுள்ளது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக மூவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை.

கார் நின்றுருந்த இடத்தில் வெளிச்சம் இல்லாததால் மூவரும் எங்கு இருக்கிறோம் என்பதை உணர முடியவில்லை.

அதே சமயம், விபத்தில் இருந்து தப்பிய அதிர்ச்சியில் இருந்து மீளாத இரு பெண்களும் காரின் கதவை திறந்துக்கொண்டு வெளியேற முயற்சித்துள்ளனர்.

ஆனால், கார் கதவிற்கு வெளியே பல மீற்றர்கள் ஆழத்தில் பள்ளம் இருந்ததை அறியாத இரு பெண்களும் வெளியேறிய அதே சமயம் அந்த அதாள பள்ளத்தில் விழுந்துள்ளனர்.

எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த விபத்தில் 22 வயதான பெண் பலத்த காயமடைந்து அதே இடத்திலேயே பலியானார். மற்றொரு பெண் புல்வெளி நிறைந்த இடத்தில் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த விபத்தை தொடர்ந்து பெண்ணின் சடலத்தை மருத்துவமனைக்கு அனுப்பிய பொலிசார் ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

625.500.560.350.160.300.053.800.748.160.70

SHARE