சிவகார்த்திகேயன் மிகவும் எமோஷ்னல் நிறைந்த மனிதர். சின்ன விஷயங்களுக்கு கூட உடனே கண்ணீர் விட்டு அழக்கூடியவர்.
இந்நிலையில் நேற்று கருணாநிதி இழப்பு இவரை மிகவும் பாதித்துள்ளது. இதனால் டுவிட்டரில் வருத்தம் தெரிவித்தது மட்டுமின்றி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மேலும், அஞ்சலி செலுத்திவிட்டு அவர் பேசுகையில் ‘ஓய்வின்றி உழைத்த சூரியன் தற்போது ஓய்வு எடுக்க சென்றுள்ளது.
இனி இப்படி ஒரு தலைவர் தமிழகத்திற்கு கிடைக்கப்போவதில்லை, இது அவராகவே விருப்பப்பட்ட ஓய்வு’ என்று உருக்கமாக பேசியுள்ளார்.