இப்போது Apple CarPlay சாதனத்தில் Google Play Music

258

ஆப்பிள் நிறுவனத்தின் iOS சாதனங்களில் சில வாரங்களுக்கு முன்னர் கூகுளின் Google Play Music செயற்படக்கூடிய வசதி தரப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது கார்களுக்காக ஆப்பிள் நிறுவனத்தினால் விசேடமாக வடிவமைக்கப்பட்ட CarPlay எனும் ஸ்மார்ட் பிளேயரில் செயற்படுத்தக்கூடியதாக காணப்படுகின்றது.

இதற்கான அனுமதியை ஆப்பிள் நிறுவனம் அளித்துள்ளதுடன் வரையறுக்கப்பட்ட சில வசதிகளை பயன்படுத்தக்கூடியதாகவும் உள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட கூகுள் பிளே மியூசிக் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பினை ஐடியூனில் இருந்து தரவிறக்கம் செய்து Apple CarPlay சாதனத்தில் பயன்படுத்த முடியும்.

முன்னைய கூகுள் பிளே மியூசிக் அப்பிளிக்கேஷன் பதிப்புக்கள் ஆப்பிள் கார் பிளேயில் செயற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE