கடந்த சில மாதங்களாகவே சினிமா ரசிகர்கள் ஒரே கொண்டாட்டத்தில் இருந்தனர். காரணம் விஜய்யின் சர்கார் படத்தை பிரம்மாண்டமாக ரசிகர்கள் போட்ட பிளான்கள் தான்.
படமும் வெளியாகி வெற்றிநடைபோட படக்குழுவும் கேக் வெட்டி கொண்டாடிவிட்டனர். அடுத்து அஜித் ரசிகர்கள் தங்களது கொண்டாட்டத்திற்கு இப்போதே வேலைகளை ஆரம்பித்துவிட்டனர்.
விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருப்பதால் பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும் என்று தல ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இதனை பிரபல வெற்றி திரையரங்க உரிமையாளரும் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.