இம்மானுவேல் மேக்ரான் – பிரிகெட்டி ஜோடி எப்படி? 

211

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் – பிரிகெட்டியின் ஜோடி பொருத்தம் சரியானதாக இல்லை என அந்நாட்டு மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் ஜனாதிபதிக்கான தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் இம்மானுவேல் மேக்ரான் (39) வெற்றி பெற்று ஜனாதிபதியாக தேர்வாகியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் இளம் வயது ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள அவருக்கு உலக நாடுகளின் தலைவர்கள் மட்டுமின்றி, அந்நாட்டு மக்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேக்ரானுக்கு, பிரிகெட்டி (63) என்னும் மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

மேக்ரானை விட அவர் மனைவி பிரிகெட்டி 24 வயது மூத்தவர் ஆவார்.

தற்போது இந்த வயது வித்தியாச விடயம் பிரான்ஸில் விவாத பொருளாகியுள்ளது.

ஒரு சில ஜனாதிபதிகள் தங்களை விட சில வயது மூத்த பெண்ணை திருமணம் செய்துள்ளனர்.

ஆனால், தங்களது ஜனாதிபதி மேக்ரான் தன்னை விட 24 வயது அதிகமான வயதான பெண்ணை திருமணம் செய்துள்ளது வருத்தமளிப்பதாக பெரும்பாலான பிரான்ஸ் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

SHARE