இம்முறை வெளிவந்த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளுக்கு பின்னால் யார் இந்த கீர்த்திகா?

330
இம்முறை வெளிவந்த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளுக்கு பின்னால் யார் இந்த கீர்த்திகா? என்று அனைவரும் தேடும் அளவிற்கு மிகவும் பிரபலமாகிவிட்ட இந்த கீர்த்திகாவை பற்றி நாமும் தேடுதல் வேட்டையை ஆரம்பித்தோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கதிரவெளியில் புதுார் என்ற ஓர் சிறிய கிராமமே இவளது வசிப்பிடம். இந்த கிராமமும் இந்த கிராமத்தை சூழவுள்ள ஏனைய கிராமங்களும் வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் கிராமங்களாகும்.

மேலும், இங்கு வசிப்பவர்கள் அனைவரும் யுத்தத்தின் கோரப்பிடியில் சிக்கியவர்களும், சுனாமியின் கோரதாண்டவத்திற்கு முகம்கொடுத்து அனைத்தையும் இழந்த மக்களுமே இங்கு வசித்து வரும் நிலையில்,

கீர்த்திகாவின் குடுபம்பமும் தந்தையை இழந்து ஆண் துணையின்றி ஓர் விதவைப் பெண்ணின் வாழ்வாதாரத்தில் குடும்பத்தை ஓட்டிச் செல்லும் சாதாரண குடும்பமாகும்.

மூன்று குழந்தைகளை கொண்ட குடும்பத்தில் மூத்த பிள்ளையான கீர்த்திகா எட்டாவது வயதில் தனது தந்தையை இழந்தாள். தனது ஆரம்பக் கல்வியை சாதாரணதரம் வரை தனது கிராமமான கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலத்தில் கற்றாள்.

கீர்த்திக்காவின் தாய் சாப்பாட்டு கடையில் வேலை செய்தும், வயலில் கூலி வேலை செய்தும் தனது பிள்ளைகளின் கல்வி தேவைகளையும் அன்றாட தேவைகளையும் கவனித்து வந்தாலும் இந்த வருமானமானது அவர்களது குடுப்ப சக்கரத்தை செலுத்த போதாத காரணத்தினால் காடுமேடென அழைந்து ஆடுகளை மேய்த்தும் மேலதிக வருமானத்தை தேட முற்பட்டாள்.

என்னதான் மாடாக உழைத்து கஸ்டப்பட்டாலும் வருமானத்தை அதிகரிக்க முடியாததால் கீர்த்திகாவை ஆச்சிரமம் ஒன்றில் தங்க வைக்க எண்ணினாள்.

இந்த நிலையில் கீர்த்திகாவின் குடும்ப நிலையை அறிந்த ஒய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் அவளை தனது இல்லத்தில் தங்கவைத்து அவளது கல்விக்கான வசதிகளை செய்து கொடுத்ததன் பயனே தன்னுடைய இந்த வளர்ச்சிக்கு காரணம் என கீர்த்திக்கா உளமார நன்றி கூற மறக்கவில்லை.

சாதாரணதரத்தில் சிறந்த நிலையில் சித்தியடைந்த கீர்த்திக்கா உயர்தரத்தை மட்டகளப்பு நகரின் பிரபல பாடசாலையான வின்சன்ட் மகளிர் கல்லுரியில் கலைப்பிரிவில் கற்கும் வாய்ப்பை பெற்றாள்.

தனது குடும்ப நிலையை எண்ணி கல்வியில் தீவிர அக்கரை செலுத்தியதன் விளைவே இவள் யாரென்று இன்று எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது என்றால் மிகையாகாது.

கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்றதன் பயன் பல்கலை கழகத்திற்கு தெரிவாகியுள்ளாள்.

இந்த நிலையில் எதிர்கால கல்வி நடவடிக்கைக்காக புலம்பெயர்ந்தோரிடமும், கருணையுள்ளம் படைத்தவரிடமும் கீர்த்திகாவின் தாயார் உதவி கோரி நிற்கும் அதே வேளை இது வரைகாலமும் தன்னுடைய கல்வி நடவடிக்கைக்கைாக சிறு சிறு உதவிகளை செய்தவர்களை அன்போடு நன்றி கூறும் கீர்த்திகா,

இனிமேல் தன்னுடைய தாயை கஸ்டப்படுத்தாது தானும் பல்கலைகழக படிப்பை நிறைவு செய்து தனது சகேதரர்களையும், தாயையும் கண்கலங்காமல் வாழ வைக்க திடசங்கட்பம் பூண்டுள்ளாள்.

இவளது எண்ணங்கள் அனைத்தும் வெற்றிகரமாக ஈடேற நாமும் பிரார்த்திப்போம்.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் தெரிவான வடக்குக் கிழக்கைச் சேர்ந்த வறிய மாணவர்களுக்கு உதவ விரும்பும் உள்ளங்கள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஊடாக உங்கள் உதவிகளை வழங்க முடியும்.

அவ்வாறு உதவும் உள்ளங்கள் ஊடாக வழங்கப்படும் உதவிகள் அனைத்தும்,  குறிப்பாக 120 வறிய மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவாகி இருந்தால் மொத்த நிதியில் இருந்து சமமாக பங்கீடு செய்யப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கின்றோம்.

தொடர்புகளுக்கு

Name : Federation of Young Men’s Hindu Association, Batticaloa district.
Bank : Commercial Bank Batticaloa
Account number : 1105040264.
SWIFT CODE : CCEYLKLX,
Bank Code : 7056-105

0094776034559, 0094652228018
yoheswaran.mp@gmail.com

SHARE