இயக்கச்சி காட்டு பகுதியில் பனை மரங்கள் தொடர்ச்சியாக வெட்டப்பட்டு வருகின்றமை தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் நேரில் சென்று ஆராய்ந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சு.சுரேனுக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் தனது குழுவினருடன் அவர் நேரில் சென்று ஆராய்ந்து உரிய தரப்பினருக்கு இது தொடர்பில் தொலைபேசி ஊடாக நிலைமைகளை எடுத்து விளக்கியுள்ளார்.
அத்தோடு தொடர்ச்சியாக இத்தகைய இயற்கை வள அழிப்புக்களை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், இதனை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கு உரிய தரப்பினருக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் அவர் அப்பகுதி மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதன்போது உபதவிசாளர் மு.கஜன், உறுப்பினர்கள் ரமேஷ், வீரபகுதேவர், கோகுல் ஆகியோருடன், இயக்கச்சி பிரதேச கமக்கார அமைப்பினரும், தவிசாளருடன் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.