இயக்குநர் கார்த்திக்குடன் இணையும் கீர்த்தி சுரேஷ்

117

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 ‘மேயாத மான்’, ‘மெர்குரி’ ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ‘தேசிய விருது’ வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

 

இந்நிலையில், அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்தின் படக்குழுவின் பணிகள் நேற்று (வெள்ளிக்கிழமை)  முதல் தொடங்கியது.

இப்படம் 2020ஆம் ஆண்டு  வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தற்போது தெலுங்கில் அறிமுக இயக்குநர் நரேந்திரா நாத் இயக்கும் ‘மிஸ் இந்தியா’ திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இதேவேளை, பொலிவுட்டில் அஜய் தேவ்கன் நடிக்கும் ‘மைதான்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

SHARE