இயக்குனராக அவதாரம் எடுக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன்!

116

பிரேமம் மற்றும் கொடி படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன் விரைவில் இயக்குனராக அவதாரம் எடுக்கவுள்ளார்.

துல்கர் சல்மான் தயாரிக்கும் ஒரு மலையாளப் படத்தில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து வரும் அவர், விரைவில் இயக்குனராகவுள்ளார்.

 

நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன்பின்னர் தமிழில் தனுசுடன் இணைந்து கொடி படத்தில் நடித்தார். அதன் பின்னர் தமிழ், மலையாளத்தில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாதமையால் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

அனுபமாவுக்குத் திரைப்பட இயக்கத்திலும் அதிக ஆர்வம் உள்ளது. படம் இயக்கியே தீருவேன் என்று துடிப்பாக இருந்த அனுபமா, தற்போது நடிப்புக்குச் சிறிது காலம் இடைவேளை விட்டு, படத்தை இயக்குவதில் மும்முரமாக ஈடுபடவுள்ளார்.

SHARE