இயக்குனர்கள் சங்க அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கிய நடிகர் சூர்யா!

149
இயக்குனர்கள் சங்கத்திற்கு நன்கொடை வழங்கிய சூர்யா

சூர்யா – ஆர்.வி.உதயகுமார்
சூர்யா நடிப்பில் தற்போது காப்பான் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கே.வி.ஆனந்த் இயக்கிய இப்படத்தில் இப்படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தார்கள். இப்படத்தை அடுத்து சுதா கங்கோரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
சூர்யா - ஆர்.வி.உதயகுமார்இந்நிலையில், நடிகர் சூர்யா தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த காசோலையை இயக்குனர்கள் சங்க செயலாளர் ஆர்.வி.உதயகுமார் பெற்றுக் கொண்டார்.
SHARE