சங்கிலி புங்கிலி கதவ தொர இது ஒரு குத்து பாடலின் வரிகள். தற்போது இந்த வரிகளின் பெயரில் ஒரு புதிய படம் தயாராக இருக்கிறது.
புதுமுக இயக்குனர் இயக்க இருக்கும் இந்த படத்தில் ஜீவா, ஸ்ரீ திவ்யாஜோடிகளாக நடிக்க இருக்கின்றனர். அதோடு A for Apple என்ற தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார் இயக்குனர் அட்லீ.
இப்படத்தில் இயக்குனர் அட்லீ ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்க இருப்பதாக வதந்திகளும் வந்துகொண்டிருக்கின்றன. இதனை அட்லீயே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.