இயக்குனர் வெற்றிமாறனின் புதிய படத்தில் கதாநாயகனாகும் சூரி!!

190
நா.முத்துகுமாரின் கவிதையை படமாக்கும் வெற்றிமாறன்

வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் அசுரன். இதில் தனுஷ், மஞ்சு வாரியர், டிஜே, கென், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்து சாதனை படைத்திருக்கிறது.
இந்நிலையில் இயக்குனர் வெற்றி மாறன் அடுத்த படத்தை எடுக்க தயாராகி விட்டார். இதில் காமெடி நடிகர் பரோட்டா சூரி கதாநாயகன் நடிக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
சூரி - வெற்றிமாறன்இப்படம் மறைந்த கவிஞர் நா.முத்துகுமாரின் கவிதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. சூரியின் அப்பாவித்தனம் கதாநாயகன் பாத்திரத்திற்கு பொருந்தியதால் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
SHARE