இரகசிய சித்திரவதைக் கூடம் தொடர்பில் 20 கடற்படை உத்தியோகத்தர்கள் கைது செய்து விசாரிக்கப்படலாம்?

241

இரகசிய சித்திரவதைக் கூடம் தொடுர்பில் 20 கடற்படை உத்தியோகத்தர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக கொழும்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

திருகோணமலையில் இந்த இரகசிய சித்திரவதைக் கூடம் இயங்கி வந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பலவந்தகாணாமல் போதல்கள் குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பு அதிகாரிகளினால் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த முகாமை நடத்திச் சென்றதாகக் கூறப்படும் 20 அதிகாரிகள் உள்ளிட்ட 20 கடற்படையினர் விரைவில் கைதாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் துணை காவல்துறை அத்தியட்சகர்கள் ஒருவரின் தலைமையில் இந்த கடற்படை முகாமின் இரகசிய சித்திரவதைக் கூடம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட உள்ளவர்கள் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் முக்கிய புலனாய்வு சேவையில் ஈடுபட்டவர்கள் எனவும் அவர்களை கைது செய்யக் கூடாது எனவும் சில தரப்பினர் குற்றம் சுமத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

SHARE