இரக்கமில்லாமல் சன்ரைசர்ஸை அசுரவேட்டையாடிய ரசல்! 25 பந்தில் 64 ரன் விளாசல்

35

 

ஐபிஎல் தொடரின் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ஆந்த்ரே ரசல் 64 ஓட்டங்கள் விளாசினார்.

பிலிப் சால்ட் அதிரடி அரைசதம்
ஐபிஎல் 2024யின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.

நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட், சுனில் நரைன் களமிறங்கினர்.

நரைன் 2 ரன்னில் அவுட் ஆக, அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் (7), ஷ்ரேயாஸ் ஐயர் (0), நிதிஷ் ராணா (9) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

ஆனால், ரன்தீப் சிங் 17 பந்துகளில் 4 சிக்ஸருடன் 35 ஓட்டங்கள் குவித்தார். தொடக்க வீரர் பிலிப் சால்ட் அதிரடியாக 40 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் விளாசினார்.

அதன் பின்னர் களமிறங்கிய ஆந்த்ரே ரசல் ருத்ர தாண்டவம் ஆடினார். அவருக்கு பக்க பலமாக ரிங்கு சிங் நிதானம் காட்டினார். சிக்ஸர் மழை பொழிந்த ரசல் 20 பந்தில் அரைசதம் அடித்தார்.

இதற்கிடையில் நடராஜன் ஓவரில் ரிங்கு சிங் (23) ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ஓட்டங்கள் குவித்தது.

ரசல் ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 64 ஓட்டங்கள் விளாசினார். இதில் 7 சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடங்கும். அத்துடன் 97 ஐபிஎல் இன்னிங்ஸ்களில் 200 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டினார் ரசல்.

SHARE