இறுதிக்கட்ட போரின் கடைசி நாட்களில் இலங்கை இராணுவத்தால் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக, போர்களத்தில் செயற்பட்ட வைத்திய கலாநிதி.ரி.வரதராஜன் தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்டத்தில் களத்தில் ஏற்பட்ட அவலங்கள், விடுதலைப் புலிகளின் தலைவரின் இளைய மகனுக்கு என்ன நடந்தது, சரணடைந்தோருக்கு என்ன நடந்தது, காணாமல்போனோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் என்ன நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது என்பது தொடர்பில் பல்வேறு விடயங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.