ஆயுதக் குழுவொன்றால் வீடொன்றில் அந்தக் களஞ்சியசாலை செயற்படுத்தப்பட்டு வந்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் கூறினார்.
அங்கு ஏவுகணைகள் மூலம் ஏவப்படும் குண்டுகள் மற்றும் ஷெல் குண்டுகள் உட்பட கனரக ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களில் சிறுவர்களும் பெண்களும் உள்ளடங்குவதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
ஷியா இனத்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட சாட்ர் நகரில் இடம்பெற்ற இந்தப் பாரிய குண்டு வெடிப்புகளால் அந்த ஆயுதக் களஞ்சியசாலை மற்றும் அதற்கு அருகிலிருந்த பள்ளிவாசல் மற்றும் கட்டடங்களும் வாகனங்களும் கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளன.
இந்நிலையில் இந்த வெடிப்பு சம்பவம் குறித்து பிராந்திய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்படி பள்ளிவாசலுக்கு ஷியா மதகுருவான முக்தாடா அல் சாட்ரின் ஆதரவாளர்கள் அடிக்கடி விஜயம் செய்து வருவது வழமையாகவுள்ளது. கடந்த மே மாதம் 12 ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலில் முக்தாடா அல் சாட்ரின் செய்ரூன் கூட்டமைப்பு மொத்தம் 54 ஆசனங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த மேற்படி வெடிப்புச் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் மேற்படி தேர்தலிலான வாக்குகளை மீள முழுமையாக எண்ணுவதற்கு ஆதரவாக பாராளுமன்றம் வாக்களித்திருந்தது.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்தத் தேர்தலை கண்காணிப்பதில் ஈடுபட்ட சுயாதீன தேர்தல் ஆணையகத்தைச் சேர்ந்த 9 உறுப்பினர்களைப் பணிநீக்கம் செய்திருந்தனர்.