இரட்டைக் கொலைகள் இரண்டு உட்பட மற்றைய பெண்களையும் வல்லுறவுக்குப் பின் கொலை

317

கஹவத்தை – ஓபாதவத்த பகுதியில் பெண்ணொருவரை கொலை செய்தது தொடர்பாக பெல்மெடுல்ல நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபர் குறித்த பிரதேசத்தில் மேலும் 6 பெண்களின் கொலைகளுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக ரகசிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Kahawatta-murder-shocking

இரட்டைக் கொலைகள் இரண்டு உட்பட மற்றைய பெண்களையும் வல்லுறவுக்குப் பின் கொலை செய்துள்ளமையும் இதன்போது தெரியவந்துள்ளது

சந்தேகநபரின் மரபணு பரிசோதனையின் போது இவ்விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

காவத்தை-ஒபாவத்தை பிரதேசத்தில் பெண்ணொருவர் கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி கொலைசெய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குறித்த நபர் கடந்த 10 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தார்.

சந்தேகநபர் 2 பிள்ளைகளின் தந்தையான 35 வயது நபரென தெரிவிக்கப்படுகின்றது.

 

SHARE