இரட்டைச் சகோதரிகளின் ஒற்றுமை… ஒரேநாளில் ஒரே நிமிடத்தில் குழந்தைகளைப் பிரசவித்த ஆச்சரியம்!..

274

அமெரிக்காவைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகள் இருவர் ஒரே நாளில் “ஒரே நிமிடத்தில்” குழந்தைகளைப் பிரசவித்துள்ளனர். 35 வயதான சாரா மேரியஸ் மற்றும் லே ரொஜர்ஸ் ஆகியேரே இச்சகோதரிகளாவர்.

இரட்டைச் சகோதரிகளான இவ்விருவரும் ஒரே மாதிரியான தோற்றத்தையும் கொண்டவர்கள். இவர்கள் திருமணம் செய்து கர்ப்பம் தரித்த நிலையில் ஆச்சரியகரமாக ஒரே நாளில் குழந்தை பிரசவித்தனர். இச்சகோதரிகள் இருவரும் வெவ்வேறு மாநிலங்களில் வசிக்கின்றனர்.

இந்நிலையில், தத்தமது மாநில நேர வலயங்களின்படி இருவரும் ஒரே நேரத்தில் குழந்தைகளை பிரசவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

லே ரோஜர்ஸுக்கு கொலராடோ மாநிலத்திலுள்ள வைத்திய சாலையில் கடந்த 30ம் திகதி காலை 1.18 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

பிரசவத்தின் பின்னர் கணவர் கீலுடன் லே ரொஜர்ஸ்

கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த சாரா மேரியட்ஸுக்கு அன்றைய தினம் கலிபோர்னியா நேரப்படி கடந்த 30ம் திகதி அதிகாலை 1.18 மணிக்கு பெண் குழந்தையொன்று பிறந்தது.

சாரா மேரியஸும் லே ரொஜர்ஸு தற்செயலாக கடந்த வருடம் ஏறத்தாழ ஒரே சமயத்தில் கரப்பம் தரித்தனர். தாம் கர்ப்பமடைந்துள்ள விடயத்தை பரஸ்பரம் ஒரே நாளிலேயே தெரிவித்துக் கொண்டிருந்தனராம்.

மகன், கணவர் நிக்குடன் சாரா மேரியஸ்

இந்த அபூர்வ பிரசவங்கள் குறித்து தாம் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளதாக சாரா மேரியஸும் லே ரொஜர்ஸும் தெரிவித்துள்ளனர்.

 

SHARE