இரட்டை படுகொலையை கண்டித்து ஏறாவூரில் கடையடைப்பு

245

ஏறாவூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இரட்டை கொலையுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் நால்வ ருக்கும்  அதிக தண்டனை  வழங்க கோரி 21.09.2016  அதாவது இன்றைய தினம் ஏறாவூரில் கடையடைக்கப்படுள்ளது .

மட்டக்களப்பு –  ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் நகர் முகாந்திரம் வீதி  முதலாவது ஒழுங்கையில் உள்ள வீட்டில் ஒன்றாக வசித்து வந்த நூர்முஹம்மது சித்தி உசைரா (வயது 56) மற்றும் அவரது மகளான ஜெனீரா பானு மாஹிர் (வயது 32) ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மர்மமான முறையில் பொல்லால் தாக்கப்பட்ட நிலையிலும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையிலும் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இதன் காரணமாக அதிக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு பதட்டமான நிலை காணக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

unnamed-6

unnamed-7

 

SHARE