இரட்டை வெடிகுண்டுத் தாக்குதல்

208

சிரியாவில் நிகழ்த்தப்பட்ட இரட்டை வெடிக்குண்டு தாக்குதலில் சுமார் 40 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிரியாவின் தலைநகரான Damascus நகரில் தான் இந்த கொடூரத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

தலைநகரில் அமைந்துள்ள Bab al-Saghir என்ற பகுதியில் சற்று முன்னர் அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றதாகவும், இதில் சுமார் 40 பேர் வரை பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தாக்குதல் தொடர்பான முழுத் தகவல்களும் வெளியாகாத நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு பொலிசார் கவலை தெரிவித்துள்ளனர்.

SHARE