இரணைமடுக்குளம் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை நேரில் சென்று பார்வையிட்ட சிறீதரன் எம்.பி

274
கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு நீர்ப்பாசன குளத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பல ஆயிரம் அமெரிக்க டொலரின் நிதியீட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் இன்றைய தினம் காலை பத்து மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் இரணைமடுக்குள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக பார்வையிட்டார்.

அத்துடன் வேலைத்திட்டத்தின் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் தொடர்பாகவும் வடமாகாண பிரதி நீர்ப்பாசனப்பணிப்பாளர் பிரேமகுமார், கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்ப்பாசனப்பணிப்பாளர் சுதாகரன் மற்றும் இரணைமடுத்திட்ட தலைமை வேலை பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் இராஜகோபு, கிளிநொச்சி நீர்ப்பாசனப்பொறியியலாளர் செந்தூரன் முன்னைநாள் வடக்கு கிழக்கு நீர்ப்பாசனப்பணிப்பாளரும் தற்போதைய இரணைமடுத்திட்ட ஆலோசகர் சண்முகசிவானந்தன், இரணைமடுத்திட்ட திட்டமிடல் பொறியியலாளர் பிரகாஸ், ஆகியோருடன் இரணைமடுத்திட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாகவும் ஆராய்ந்ததோடு குறித்த குளத்தின் கீழ் உள்ள நீர்ப்பாசன வாய்க்கால்களின் புனரமைப்பு மற்றும் அதனோடு இணைந்த விவசாய வீதிகளின் அபிவிருத்தி நிலமைகள் குறித்தும் அதிகாரிகளோடு கலந்துரையாடப்பட்டது.

இரணைமடுக்குள புனரமைப்புக்காக இவ்வருடம் பதினைந்தாயிரம் ஏக்கர் வரையிலான சிறுபோகச் செய்கை நிறுத்தப்பட்டதுடன் கடந்த காலங்ளில் இக்குளம் புனரமைக்கப்படாத நிலை காரணமாக நீரைத்தேக்குவதில் நீர்ப்பாசனத்திணைக்களம் பாரிய சவால்களை எதிர்கொண்டிருந்தது. அத்தோடு எட்டாயிரம் வரையான ஏக்கர் நிலம் சிறுபோகச்செய்கைக்கு பயன்படுத்த முடியாத நிலமை காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE