இரண்டாவது நாள் உணவு ,நீர் ஒறுப்பு போராட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்!
இரண்டாவது நாள் பிலக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு,கேப்பாபுலவு மக்களின் காணிகளில் இருந்து இராணுவமும் விமணப்படையும் உடனடியாக வெளியேற வேண்டும் என உணவு ,நீர் ஒறுப்பு போராட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சி.சிவமோகன், இலங்கை தமிழரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளச்செழியன், லவகுசன், மற்றும் காணி உரிமையாளர்கள் உணவு,நீர் ஒறுப்பு போராட்டத்தில் இருந்துவருகின்றார்கள்
மக்களின் காணிகளை சட்டத்துக்கு முரணாக அபகரித்த இராணுவத்தின் நடவடிக்கைகளை மாவட்டசெயலாளரும், பிரதேச செயலாளரும், அரசுக்கு தெரிவிக்க பின் நிற்பது கவலைக்குரிய விடயமாகும். ஆண்டாண்டு காலமாக ஆண்டுவந்த காணியை அற்ப சொற்ப காரணம் காட்டி அரசுக்கு தாரை வாக்க முற்படுவது முந்தானை பிடித்து தமது பதவிகளை தக்கவைக்க முயற்சிப்பதாக மக்கள் விசனம் தெரிவித்ததாகவும் அரசு அதிகாரிகளின் தவறான நடவடிக்கையின் காரணமாகத்தான் மக்கள் தொடர் போராட்டத்திலும் உணவு,நீர் ஓறுப்பு போராட்டத்திலும் குதித்து அரசியல்ரீதியான தீர்வை கோரி நிற்கின்றார்கள். என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ.சி.சிவமோகன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.